குஜராத்தில் ஒரே நாளில் 3,280 பேருக்கு கரோனா பாதிப்பு: 17 பேர் பலி

குஜராத்தில் கரோனா தொற்று பரவல் செவ்வாய்க்கிழமை மோசமடைந்தது, குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 3,280 பேர் பாதிப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். 
குஜராத்தில் ஒரே நாளில் 3,280 பேருக்கு கரோனா பாதிப்பு: 17 பேர் பலி
Published on
Updated on
1 min read

காந்திநகர்: குஜராத்தில் கரோனா தொற்று பரவல் செவ்வாய்க்கிழமை மோசமடைந்தது, குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 3,280 பேர் பாதிப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

காந்திநகரில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் அடுத்து 3-4 தினங்களுக்கு முழு ஊரடங்கு விதிக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து குஜராத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது குஜராத் அரசு. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், வரும் 30 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் மார்ச் மாதத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக 1,220 என்ற அளவில் இருந்த தொற்று பாதிப்பு தற்போது 37,809 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இதுவரை 17,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தினசரி பாதிப்பு சராசரியாக 2,863 ஆக உள்ளது. 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,167 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை குஜராத்தில் 3,02,932 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 17,348 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சூரத் 811, ராஜ்கோட் 385, வதோதரா 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜாம்நகர் 142, பதான் 107, பாவ்நகர் 94, காந்திநகர் 73, ஜுனகத் 37, கட்ச் 35, மஹிசாகர் 34, மோர்பி மற்றும் பஞ்ச்மஹால்ஸில் தலா 32, கெடா 29, தஹோத் 28, அம்ரேலி, ஆனந்த், பனஸ்கந்தாவில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சூரத் மற்றும் அகமதாபாத்தில் தலா 7 பேரும், ராஜ்கோட்டில் 2  மற்றும் வதோதராவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு நாள்களில், 79 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, 78,85,630 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவர்களில் 70,38,445 பேர் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் 8,47,185 பேருக்கு இரண்டாவது செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், 45 முதல் 60 வயதுக்குட்பட்ட கரோனா நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அங்கு 2,75,777 பேர் முதல் டோஸ்ஸையும், 29,886 பேர் இரண்டாவது டோஸ்ஸையும் எடுத்துள்ளனர்.

இதனிடையே, குஜராத் பல்கலைக்கழகம் ஏப்ரல் 12 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுகளை ரத்து செய்துள்ளது, மேலும் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com