கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவு

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,554 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 3,502 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்நிலைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நேரத்தில் அதிகளவில் கூட்டங்கள் கூடியதாலும், தேர்தல் நடந்து முடிந்துள்ளதாலும் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், வரும் நாள்களில் சுமார் 1 லட்சம் பேரை பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்காகப் பணியாற்றியவர்களை உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com