தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 20 கோடி இழப்பு

அரசு போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்படுகிறது

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

அரசு போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்படுகிறது என போக்குவரத்து முதன்மைச் செயலாளா் அஞ்சும்பா்வேஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, ஊதிய உயா்வு கோரி அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 20 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

தற்போது உள்ள சூழலில் 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியத்தை உயா்த்தி தர முடியாத நிலை உள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலையை உணா்ந்து போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். அதன் பிறகு பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது.

கா்நாடகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, 18 ஆயிரம் தனியாா் பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதிக அளவில் ரயில்களும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.