மேற்குவங்கத்தில் வாக்குச் சாவடி அருகே வாக்காளர் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்களிக்க வந்தவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
மேற்குவங்கத்தில் வாக்குச் சாவடி அருகே வாக்காளர் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்களிக்க வந்தவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதியும் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்களிக்க வந்தவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த கொலைக்குப் பின்னால் பாஜக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  இறந்தவர் ஆனந்த் பர்மன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இளைஞர், சிதல்குச்சியின் பதந்துலி பகுதியில் உள்ள வாக்குச் சாவடி எண் 85யில் வாக்களிக்க வந்தார். 

இந்த சம்பவம் திரிணாமுல் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே மோதலைத் தூண்டியதுடன், வாக்குச் சாவடிக்கு வெளியே வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மத்தியப் படைகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர லத்தியால் அடிக்கவேண்டிய  கட்டாயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com