
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தில்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டார். இவர் 2022ஆம் ஆண்டு மே 14 தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றுவார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.