தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகளுக்கு சரியான திட்டமிடல் தேவை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் புதன்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் புதன்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கரோனா தடுப்பூசி செலுத்துவது தீவிரமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களும் கரொனா தடுப்பூசி வழங்கப்பட்டதில் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவித்து வருகின்றன. 

இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com