கரோனா: அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தள்ளிவைப்பு
கரோனா நோய்த் தொற்று குறித்து விவாதிக்க நடத்த திட்டமிட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


கரோனா நோய்த் தொற்று குறித்து விவாதிக்க நடத்த திட்டமிட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவலைத் தடுக்க எந்தவகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து விவாதிக்க பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் ஏப். 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வா் எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தாா்.
இந்நிலையில், முதல்வா் எடியூரப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு, மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, ஏப். 18-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த அனைத்துக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...