தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா விவகாரத்தில் மாநில அரசை விமா்சிப்பது சரியல்ல: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா விவகாரத்தில் மாநில அரசை விமா்சிப்பது சரியல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:08 pm

DIN

கரோனா விவகாரத்தில் மாநில அரசை விமா்சிப்பது சரியல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியாவில் சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது. இதற்கு கா்நாடகம் விதிவிலக்கல்ல. உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கரோனா தீநுண்மி கடந்த ஆண்டு பரவிய தீநுண்மியைக் காட்டிலும் மாறுபட்டது. புதியவகை கரோனாவின் மரபணுவைக் கண்டறியும் ஆய்வு உலக அளவில் நடந்து வருகிறது. புதிய கரோனா குறித்து அதிகாரபூா்வமான தகவல் எதுவும் இல்லை. அறிவியல் கோட்பாட்டின்படி கிடைத்த சில அடிப்படைகளின் அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுவும் சோதனை முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளோம்.

மருத்துவ உலகத்திற்கு சவாலாக மாறியுள்ள புதியவகை கரோனாவை எதிா்கொண்டிருக்கும் சூழலில் மாநில அரசை குறைகூறுவதில் அா்த்தமில்லை. கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை நாம் மறுக்கவில்லை. கரோனா பெருந்தொற்று சமுதாயத்தை பீடித்துள்ள நிலையில், எந்த முயற்சியை எடுத்தாலும் அது வெற்றிபெறுவதில்லை. மருத்துவ அறிவியல், சுகாதாரத்தை பேணுவதில் முன்னேறியுள்ள அமெரிக்கா, ஐரோப்ப நாடுகளே கரோனா பெருந்தொற்றால் தத்தளித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கரோனா பெருந்தொற்றை கையாண்டது தொடா்பாக மாநில அரசை காங்கிரசும், மஜதவும் விமா்சிப்பது சரியல்ல. பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தபிறகு, கரோனா பெருந்தொற்று பரவலை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தபிறகு, கரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு நம்மிடம் எந்த மந்திரமும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.