டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 107 பேருக்கு கரோனா 

டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 107 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கல்வி நிறுவன இயக்குனர் அருண் சிங் ராவத் தெரிவித்தார். 
Dehradun's Forest Research Institute
Dehradun's Forest Research Institute

டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 107 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கல்வி நிறுவன இயக்குனர் அருண் சிங் ராவத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் கூறியதாவது, 

டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் தினமும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 107 பேருக்கு புதிதாகத் தொற்று பரவியுள்ளது. 

வளாகத்திற்குள் வெளி ஆட்கள் நுழையாவண்ணம் நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் வரை வன ஆராய்ச்சி நிறுவனம் மூட உத்தரவிட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், சிலர் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தெரிவித்தார்.

இதற்கிடையில், ஏப்ரல் 26 இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி அதிகாலை 5 மணி வரை டேராடூனில் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com