
தொலைநோக்கு பார்வையுடைய மத்திய அரசே அவசியமானது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. நாள்தோறும் உயர்ந்துவரும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் புதன்கிழமை தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “புதிய நாடாளுமன்றக் கட்டடம் அநாவசியமனது. தொலைநோக்குடைய மத்திய அரசு தற்போதைய அவசியத் தேவையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகள் இல்லாததைக் குரிப்பிட்டு புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானத்தை எதிர்த்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.