
தேசிய பெண்கள் ஆணையம், கர்ப்பிணி பெண்களுக்காக வாட்ஸ்ஆப் உதவி எண்ணை (9354954224) அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகள் முழுவதும் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைகளுக்காக வாட்ஸ்ஆப் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி அவசரத் தேவைகளுக்காக கர்ப்பிணி பெண்கள் 9354954224 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் 24 மணி நேரமும் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் helpatnew@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.