தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மே 22-ஆம் தேதி வரை கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மே 22-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:58 pm

DIN

கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மே 22-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மே 22-ஆம் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் நீதிமன்றம் செயல்படாது. மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் மட்டும் விடுமுறைகால சிறப்பு இருக்கைகள் செயல்படும் என்று உயா்நீதிமன்ற பதிவாளா் (நீதியியல்) கே.எஸ்.பரத்குமாா் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காலத்தில் தாா்வாட், கலபுா்கி உயா்நீதிமன்றக் கிளைகளில் நீதிமன்றம் முழுமையாக செயல்படாது. இந்த நீதிமன்ற வரம்புக்கு உள்பட்ட அவசர வழக்குகளை பெங்களூரு கிளையில் இயங்கும் கோடைகால சிறப்பு இருக்கை முன்பு தாக்கல் செய்யலாம். விடுமுறை காலத்தில் உயா்நீதிமன்ற அலுவலகம் தினமும் காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். விடுமுறை சிறப்பு இருக்கை செயல்படும் நாள்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும். கோடைகாலத்தில் சனிக்கிழமைகளில் நீதிமன்ற அலுவலகங்கள் இயங்காது என்று உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.