மகாராஷ்டிரத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

​மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிரத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு


மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

பெல்சர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை கிடைத்தன. ஜிகா பாதிப்பைத் தாண்டி சிக்குன்குன்யா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. 

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. எனினும், அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவக் குழு சனிக்கிழமை அந்த கிராமத்துக்குச் சென்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com