
புதுதில்லி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசினார்.
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக தில்லி சென்றுள்ளார்.
புதுதில்லி தெலங்கானா அரசு இல்லத்தில் தங்கியுள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, மீன்வளத்துறை, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் மரியாதை நிமித்தமாக புதன்கிழமை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது ஆளுநர் தமிழிசை, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.