கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை அளிக்கலாம்: ஆய்வில் தகவல்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடக்குவாத மருந்து பாதுகாப்பை அளிக்கிறது என லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடக்குவாத மருந்து பாதுகாப்பை அளிக்கிறது என லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமான மற்றும் மிதமான கரோனா அறிகுறிகள் கொண்டவர்களுக்கு முடக்குவாததிற்கு அளிக்கப்படும் அனகின்ரா மருந்தை வழங்கினால் அவர்களின் உடல்நிலை மேம்படும் என லான்செட் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் வீக்கம், லிம்போசைட் இரத்த அணுக்கள் குறைவது, இறப்பு விகிதம் ஆகியவை அனகின்ரா மருந்தை எடுத்துகொள்பவர்களுக்கு குறைவாக காணப்படுகிறது.

உடல் வீக்கம் அடைவது உள்ளிட்ட அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு இந்த குறிப்பிட்ட மருந்து பாதுகாப்பை தருகிறது என்றும் இறப்பு விகிதத்தை குறைக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், அனகின்ரா மருந்து இந்தியாவில் கிடைக்காததால் இதை இறக்குமதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல், இந்தியாவின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டால், இறக்குமதி செய்வது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயின்போ குழந்தைகள் மருத்துவமனை, எஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனை ஆகியவற்றில் இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கரோனாவால் குணமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. இதுகுறித்து ரயின்போ மருத்துவமனையின் குழந்தைகள் வாத நோய் மருத்துவர் சந்திரிகா பட் கூறுகையில், "இந்த மருந்து மகவும் விலை உயர்ந்தது. ஒரே நேரத்தில் 28 ஊசிகளை வாங்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com