பஞ்சாப்: 20 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு

பஞ்சாப் மாநிலம், லுதியானாவில் 2 அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 2 பள்ளிகளும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்ப
பஞ்சாப்: 20 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு


பஞ்சாப் மாநிலம், லுதியானாவில் 2 அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 2 பள்ளிகளும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து கடந்த 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. 

இதையடுத்து 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மத்தியில் மீண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டாவது வாரத்தில், லுதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று கண்டறியப்பட்டுள்ள அந்த 2 பள்ளிகள் 14 நாள்களுக்கு (ஆகஸ்ட் 24) மூடப்பட்டுள்ளன. மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். தினமும் 1.500 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த துணை ஆணையர் வி.கே. சர்மா,  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொற்று பரிசோதனை நடத்துவதற்காக பள்ளிகள் திறந்திருக்கும். தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடையே தொற்று பரவுவதை கண்காணிப்பதற்காக மாநில சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாக கூறினார். 

இந்நிலையில், ஆசிரியர்களும் முன்களப்பணியாளர்கள்தான் என தெரிவித்துள்ள நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதுவரை சுமார் 50 சதவிகித பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com