ஆந்திரத்தில் தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை

ஆந்திரம் மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அறையை புதிதாக திருமணம் செய்த தம்பதியினர் தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட
ஆந்திரத்தில் தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை
Published on
Updated on
1 min read


காக்கிநாடா: ஆந்திரம் மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அறையை புதிதாக திருமணம் செய்த தம்பதியினர் தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில அரசு அறிக்கை கேட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பல்கலைக்கழகத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் ஆகஸ்ட் 18, 19 ஆகிய இரண்டு நாள்களுக்கு புதுமண தம்பதியினருக்கு தேனிலவு நடத்துவதற்காக அறை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. பின்னர், அடுத்தாள் இந்த அறைக்குச் சென்ற அதிகாரிகள் அறை முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பான விடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இரண்டு அறைகள் வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது. 

பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை பல்கலைக்கழகத்தின் மகளிர் அதிகாரமளிப்புப் பிரிவின் இயக்குநர் ஏ. ஸ்வர்ண குமாரி பதிவு செய்துள்ளார். பல்கலைக்கழக பேராசிரியரின் மாணவர் பயன்படுத்துவதற்காக அவர் விருந்தினர் மாளிகையை முன்பதிவு செய்துள்ளார். 

ஆனால் அது பயன்படுத்தப்பட்ட நோக்கம் தவறானது, இது குறித்து விசாரிப்பதற்காக சனிக்கிழமை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சில தினங்களில் தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். 

சம்பவம் குறித்து சரியான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அம்மாநில அரசு கேட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com