கல்யாண் சிங்கின் மறைவு பாஜவிற்கு பெரும் இழப்பு: அமித் ஷா

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மறைவு பாஜகவிற்கு பெரும் இழப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மறைவு பாஜகவிற்கு பெரும் இழப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங்கின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல் மற்றும் வி.கே. சிங்கும் சென்றனர்.

அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அமித்ஷா கூறுகையில், “கல்யாண் சிங்கின் மறைவு பாஜகவுக்கு பெரிய இழப்பு. அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது கடினமாக இருக்கும். ராம் மந்திர் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு அவர் தனது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியதாகக் கூறினார்.”

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான கல்யாண் சிங், உடல்நலக் குறைவு காரணமாக லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனா். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com