
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த 7 பேரும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பலியானவர்களில் ஒருவர், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து நள்ளிரவில் நிகழ்ந்ததால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோரமங்கலா பகுதியில், நள்ளிரவில் வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த காரில் இருந்த ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.