
கரோனா 3-வது அலை பரவும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் போராட்டங்கள் என்ற பெயரில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தரவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கரோனா மூன்றாவது அலை பரவும் என்றும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் மத்திய அரசுஅனுப்பிய கடிதத்தை அளிப்பேன். சிலர் யாத்திரைகளை மேற்கொள்கின்றனர். இது துரதிருஷ்டவசமானது. இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை அசாதாரண சூழலுக்கு தள்ளப்படுகிறது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.