‘முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவை’: இந்திய மருத்துவ சங்கத் தலைவர்

முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வகை உலகம் முழுவதும் பரவி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஒமைக்ரான் வகை உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் ஜெயலால் இன்று வெளியிட்ட செய்தியில்,

முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டர் டோஸ் வழங்கப்படுவது அவசியமாகும். முதுநிலை நீட் தேர்விற்கான கலந்தாய்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த தாமதத்தை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com