விடைபெற்றார் விபின் ராவத்
விடைபெற்றார் விபின் ராவத்

ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு...விடைபெற்றார் விபின் ராவத்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Published on

விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல் தில்லியில் உள்ள பிரார் சதுக்க மயானத்தில் வைக்கப்பட்டு, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள், ராணுவ அலுவலர்கள் ஆகியோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ராவத்தின் மகள்கள் கிருத்திகா, தாரினி ஆகியோர் தங்களது தாய், தந்தையரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர்.

முழு ராணுவ மரியாதையுடன் ராவத், அவரது மனைவி ஆகியோரது உடல்கள் தகனம் செய்யப்பட்டது. இதில், 800க்கும் மேற்பட்ட ராணுவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். 17 பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை வழங்கினர்.

பின்னர், இருவரது உடலுக்கும் அவரது மகள்கள் தீ வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com