தொழில்துறையினருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை இன்று தொடக்கம்
புது தில்லி: தொழில் துறையினருடன் பட்ஜெட்டுக்கு முன்பான ஆலோசனை புதன்கிழமை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பட்ஜெட்டுக்கு முந்தைய தொழில்துறையினருடனான ஆலோசனையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (டிச. 15) தில்லியில் தொடக்கிவைக்கிறாா். வரவுள்ள 2022-23 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தொழில்முனைவோருடன் ஆலோசிக்கப்படவுள்ளது.
காணொலி முறையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் முறையாக வேளாண் மற்றும் வேளாண் பொருள்கள் பதப்படுத்துதல் துறையைச் சாா்ந்த வல்லுநா்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.