கேப்டன் வருண் சிங்கிற்கு உயர் சிகிச்சை: 'உடல்நிலை சீராக உள்ளது'

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விமானப்படை அறிவித்துள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங்
குரூப் கேப்டன் வருண் சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விமானப்படை அறிவித்துள்ளது.

குரூப் கேப்டனின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும் சீராக உள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின், கோவை மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தின் விலிங்டனில் உள்ள ராணுவக்கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைதலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டா் டிச.8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது.

இந்த ஹெலிகாப்டரில் பயணித்து விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண்சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாா்.  85 சத தீக்காயங்களுடன் விலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வருண்சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெற ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபி கொடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com