கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவிய இடங்களில் உள்ள வாத்துகளை சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.
கோட்டயம் மாவட்டத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறிப்பட்டதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை முதல் தாலுக்கா வாரியாக வாத்துகளை சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 35,000 வாத்துகள் வரை கண்டறியப்பட்டுள்ள நிலையில் நீந்தூர், கல்லாறு மற்றும் வெச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களில் 16,976 வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இன்றும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாத்துகள் அழிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து கோட்டயம் ஆட்சியர் ஜெயஸ்ரீ கூறியதாவது:
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கல்லாறு, வெச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாத்துகள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.