
காஷ்மீரில் மறைத்து வைத்திருந்த ஐஇடி வெடிகுண்டை இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயலிழக்கச் செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் நேவா ஸ்ரீநகர் சாலையில் தாக்குதல் நடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த 5 கிலோ ஐஇடி வெடிகுண்டை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்களைக் வரவழைத்துச் செயலிழக்கச் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் , ‘ புல்வாவாமின் நேவா ஸ்ரீநகர் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலழிக்கச் செய்ததால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது’ எனத் தெரிவித்தனர்.
மேலும், வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.