திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

நாட்டில் ஒருநாள் கரோனா பலி எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

News image

நாட்டில் ஒருநாள் கரோனா பலி எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது

Updated On :2 பிப்ரவரி 2021, 5:19 am


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,66,245 ஆக உள்ளது.

நாட்டில் கரோனா பாதித்தவர்களில் 94 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,54,486 ஆக உள்ளது.

நாட்டில் கரோனா பாதித்தவர்களில் 94 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,54,486 ஆக உள்ளது.

தற்போது நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,63,353 ஆக உள்ளது. இதுவரை நாட்டில் கரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,04,48,406 ஆக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.