அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திருச்சி சிவா

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

News image

தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திருச்சி சிவா

Updated On :3 பிப்ரவரி 2021, 7:46 am

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசுத்  தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறினார்.

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

டெல்டா பகுதிகளில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் மாநிலங்களவையில் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தும் திருச்சி சிவா மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.