கரோனா பாதிப்பு: புதிதாக ஏழு அறிகுறிகள் சேர்ப்பு
கரோனா பாதிப்பு: புதிதாக ஏழு அறிகுறிகள் சேர்ப்பு

கரோனா பாதிப்பு: புதிதாக ஏழு அறிகுறிகள் சேர்ப்பு

காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல நோய்கள் கரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக 7 அறிகுறிகள் இணைக்கப்பட்டுள்ளன.


காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல நோய்கள் கரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக 7 அறிகுறிகள் இணைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சுவை திறன் இழத்தல், நுகர்வு திறன் இழத்தல் போன்றவை இதுவரை கரோனா அறிகுறிகளாக இருந்த நிலையில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகள் தற்போது கரோனா அறிகுறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக இணைந்த அறிகுறிகளில், தசை வலி மற்றம் மூட்டு வலி, வயிற்றுப் போக்கு, சருமப் பிரச்னை, கை, கால் விரல்களின் நிற மாற்றம், வெண்படலம் உள்ளிட்டவையும் கரோனா அறிகுறிகளாக இணைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று மெல்ல குறைந்து வந்தாலும், ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை நினைவில் கொண்டு, கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக ஒருநாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல கரோனா பலி எண்ணிக்கையும் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,08,47,304 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து 78 பேர் பலியான நிலையில், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,05,48,521 ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 97.25% ஆகும். தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,43,625 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1.32 சதவீதமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com