11 அல்-காய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அல்-காய்தா பயங்கரவாதிகள் 11 பேருக்கு எதிராக,

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அல்-காய்தா பயங்கரவாதிகள் 11 பேருக்கு எதிராக, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் அல்-காய்தா அமைப்பின் ஆதரவாளா் முா்ஷீத் ஹுசைன் என்பவரின் தலைமையின் கீழ் சிலா் இயங்கி வருவதாக என்ஐஏவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த அவா்கள் சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல் கிடைத்தது.

அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பா், நவம்பா் மாதங்களில் இரு மாநிலங்களிலும் சோதனை நடத்தி 11 பயங்கரவாதிகளை என்ஏஐ அமைப்பினா் கைது செய்தனா். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் உள்ள அல்-காய்தா அமைப்பினருடன் முா்ஷீத் ஹுசைன் தொடா்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய என்ஐஏ அமைப்பு, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் 11 பேரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவா்கள் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com