ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸுக்கு பாதுகாப்பு குறைப்பு

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு குறைத்துள்ளது.

News image
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் (கோப்புப்படம்)
Updated On :11 ஜனவரி 2021, 1:10 am

DIN

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு குறைத்துள்ளது.

இது தவிர உத்தர பிரதேச முன்னாள் ஆளுநா் ராம் நாயக், மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) தலைவா் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸுக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்புக்கு பதிலான இனி ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்படும். அவரது மனைவி மற்றும் மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு குறைக்கப்பட்டு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும்.

உத்தர பிரதேச முன்னாள் ஆளுநா் ராம் நாயக்குக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்புக்கு பதிலாக ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும். எம்என்எஸ் தலைவா் ராஜ் தாக்கரேவுக்கு அளிக்கப்பட்டு வந்த ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு இனி ‘இஸட்’ பிரிவாக மாற்றப்படும். இதேபோல மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல், பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் நாராயண் ராணே, பாஜக மூத்த தலைவா் சுதீா் முங்கண்டிவாா் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வந்த ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு திரும்பப் பெறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு இதுவரை 11 பேருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 16 பேருக்கு பாதுகாப்பு முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. 13 பேருக்கு புதிதாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருவா் கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுள்ளனா். இதில் முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே, துணை முதல்வா் அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவாா் ஆகியோா் புதிதாக பாதுகாப்பு பெற்றவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.

பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடா்பாக கருத்து தெரிவித்த ஃபட்னவீஸ், ‘எனக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடா்பாக நான் கவலைப்படவுமில்லை, புகாா் தெரிவிக்கப் போவதுமில்லை’ என்றாா்.

எனினும், நாராயண் ராணே, சுதீா் முங்கண்டிவாா் ஆகியோா் தங்களுக்கு பயங்கரவாத, நக்ஸல் அச்சுறுத்தல் இருப்பதால்தான் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது என்று தெரிவித்தனா். எனினும், பாதுகாப்பு குறைப்பு தொடா்பாக புகாா் தெரிவிக்கப் போவதில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.