
கொச்சி: கேரளம் மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் விமானப் பயணி மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் வந்த கண்ணூர் விமான நிலையம் வந்த பயணிகளிடம் கொச்சி சுங்கத்துறையினா் நடத்திய சோதனையின்போது, பயணி ஒருவர் தனது மலக்குடலுக்குள் மாத்திரை வடிவிலான நான்கு தங்கக்கட்டிகளை மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்தும் ரூ.49,08,960 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொச்சி சுங்கத்துறை ஆணை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.