

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள இந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 5 பேரின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.