குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் வாசிம் ஹம்தானி திங்கள்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் வாசிம் ஹம்தானி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

தேடுதல் நடவடிக்கைகள் ஒரு வழக்கமான விஷயம் என்றாலும், எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர், பிஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், எல்லைப்பகுதியில் சிறப்பு தேடுதல் இயக்கிகள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பி.எஸ்.எஃப் எல்லையில் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் அமைக்கும் எந்தொரு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையையும் நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் கண்காணித்து முறியடிப்போம் என்று அவர் கூறியுள்ளார். 

இந்தியா 72-வது குடியரசு தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெற்ற நிலையில், இது இரண்டாவதாகக் கொண்டாடப்படும் குடியரசு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com