புது தில்லி குண்டு வெடிப்பு:  இது வெறும் 'டிரெய்லர்' என்ற கடிதத்தால் பரபரப்பு

புது தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகில் சிறிய ரக குண்டு வெடித்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புது தில்லி குண்டு வெடிப்பு:  இது வெறும் 'டிரெய்லர்' என்ற கடிதத்தால் பரபரப்பு
புது தில்லி குண்டு வெடிப்பு:  இது வெறும் 'டிரெய்லர்' என்ற கடிதத்தால் பரபரப்பு
Published on
Updated on
1 min read


புது தில்லி: புது தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகில் சிறிய ரக குண்டு வெடித்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில், குண்டு வைக்கப்பட்டிருந்த காரை இரண்டு பேர் அவ்விடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி, இஸ்ரேல் நாட்டு தூதரகத்தை நோக்கி நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து, விசாரணைக் குழுவினர், புது தில்லி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், இந்திய விசாரணைக் குழுவினருடன் இணைந்து இவர்களும் பணியாற்ற உள்ளனர்.

அந்த காரின் ஓட்டுநர் எங்கிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த காரிலிருந்து இறங்கிச் சென்றவர்களின் புகைப்படங்கள் வரையப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் இது வெறும் ஒத்திகைதான் (டிரெய்லர்) என்று எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகில், நேற்று மாலை குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 4 காா்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீ. தூரத்தில் உள்ள அப்துல்கலாம் சாலையில் குண்டுவெடித்தது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதைத் தொடா்ந்து தில்லியில் பாதுகாப்பு உஷாா் படுத்தப்பட்டது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘இஸ்ரேல் தூதரகம் அருகில் வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் குண்டுவெடித்தது. இதைத் தொடா்ந்து இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சக்தி குறைந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் காயமடையவில்லை. சில காா்களின் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. தில்லியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்றாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com