டெல்டா வகை கரோனாவை எதிர்க்கும் திறனுடையவை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி

தங்களது நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கரோனாவை எதிர்க்கும் திறன் கொண்டவை என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி:  அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை கரோனாவை எதிர்க்கும் திறன் கொண்டவை தங்கள் நிறுவன ஒரே தவணை தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 8 மாதங்களுக்‍கு நீடிப்பதகாவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்டு. கோவேக்சின் ஆகிய இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவதாக மாடர்னா தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டநாடுகளில்  பயன்பாட்டில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என்று மத்திய அரசு கூறியதாக அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், வேகமாக பரவி வரும் டெல்டா வகை கரோனா நோய்த்தொற்று மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய்களுக்கு எதிராக வீரியத்துடனும் மற்றும் நீடித்து செயல்படுவதை நிரூபிக்கும் ஒரே தவணை தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 8 மாதங்களுக்‍கு நீடிப்பவை என்பதற்கான ஆய்வறிக்கையை வியாழக்கிழமை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 

தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 8 மாதங்களுக்‍கு நீடிப்பதகாவும், 

ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசி கடுமையான மற்றும் சிக்கலான நோய்களுக்கு எதிராக 85 சதவீதம் பயனுள்ளதாக இருந்துள்ளது. உயிரிழப்புக்கு எதிரான பாதுகாப்பு நிரூபித்துள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் உள்பட உலகளவில் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பிராந்தியங்களிலும் இந்த தடுப்பூசி தொடர்ந்து பயனுள்ளதாகவும், ஆய்வுக் காலங்களில் வேகமாக பரவி வரும் பீட்டா மற்றும் ஜீட்டா வகை தொற்றுகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. 

உலகளவில் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே தவணை தடுப்பூசி, தற்போது பல நாடுகளிலும் அவசர கால பயன்பாட்டுக்கான தடுப்பூசி பட்டியலில் இலாப நோக்கற்ற அடிப்படையில் கிடைக்கிறது. இது பிப்ரவரி 27-ஆம் தேதி அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தையும், மார்ச் 11 ஆம் தேதி ஐரோப்பிய ஆணையத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தையும் பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com