மேற்குவங்க பேரவை ஆளுநர் உரையுடன் தொடக்கம்: பாஜக வெளிநடப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஜக்தீப் தன்கா் உரையுடன் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவை
மேற்கு வங்க சட்டப்பேரவை

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஜக்தீப் தன்கா் உரையுடன் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக சட்டப்பேரவைக் கூடியுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் உரையின்போது, மேற்கு வங்க தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை குறித்து பேசும்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டப்படி வெளிநடப்பு செய்தனர்.

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது, ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 7ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள், போலி தடுப்பூசி முகாம்கள் குறித்து எதிர்க்கட்சியான பாஜக கேள்வி எழுப்பவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com