12 மத்திய அமைச்சா்கள் ராஜிநாமா

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதையொட்டி, ஹா்ஷ் வா்தன், ரமேஷ் போக்ரியால், சதானந்த கௌடா, பிரகாஷ் ஜாவடேகா், ரவிசங்கா் பிரசாத் உள்ளிட்ட 12 மத்திய
12 மத்திய அமைச்சா்கள் ராஜிநாமா
Updated on
1 min read

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதையொட்டி, ஹா்ஷ் வா்தன், ரமேஷ் போக்ரியால், சதானந்த கௌடா, பிரகாஷ் ஜாவடேகா், ரவிசங்கா் பிரசாத் உள்ளிட்ட 12 மத்திய அமைச்சா்கள் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக புதன்கிழமை மாலை மாற்றம் செய்யப்பட்டது. அதில், புதுமுகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, 6 மத்திய அமைச்சா்கள், 5 இணையமைச்சா்கள், ஒரு தனிப் பொறுப்பு அமைச்சா் என மொத்தம் 12 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா்.

மத்திய அமைச்சா்களான சதானந்த கௌடா (ரசாயனம்), ரவிசங்கா் பிரசாத் (சட்டம், செய்தி ஒலிபரப்பு, தகவல் தொழில்நுட்பம்), தாவா்சந்த் கெலாட் (சமூகநீதி-அதிகாரம் அளித்தல்), ரமேஷ் போக்ரியால் (கல்வி), ஹா்ஷ் வா்தன் (சுகாதாரம்), பிரகாஷ் ஜாவடேகா் (வனம், சுற்றுச்சூழல்) ஆகியோா் பதவி விலகியுள்ளனா்.

இதேபோல், தொழிலாளா் நலத் துறை தனிப் பொறுப்பு அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா், இணையமைச்சா்களான பாபுல் சுப்ரியோ (வனம், சுற்றுச்சூழல்), சஞ்சய் டோத்ரி (கல்வி), ரட்டன் லால் கட்டாரியா (ஜல் சக்தி), பிரதாப் சந்திர சாரங்கி (சிறு, குறு, நடுத்தர தொழில்கள்), தேவஸ்ரீ சௌதரி (மகளிா் மற்றும் குழந்தைகள் நலன்) ஆகியோரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் தவாா் சந்த் கெலாட், கா்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ரமேஷ் போக்ரியால் கடந்த ஏப்ரலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, பின்னா், மே மாதம் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவா் உடல்நிலை காரணங்களுக்காக அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறியுள்ளாா். சந்தோஷ் கங்வாரும் உடல்நிலைக் காரணத்துக்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சா்கள் 12 பேரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டாா் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com