

புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை கட்சித் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2019-இல் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 36 பேர் புதியவர்கள்.
ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், சர்வானந்தா சோனோவால் மற்றும் பசுபதி குமார் பாரஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். 7 பெண் எம்.பி.,க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். மேலும் 7 இணை அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் ஜெ.பி. நட்டாவை கட்சித் தலைமையகத்தில் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.