ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மாளிகை பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை
ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மாளிகை பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மாளிகை பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை

ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகை பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
Published on

ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகை பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஜம்மு விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஜூன் 27ஆம் தேதி விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளை விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக ஜம்மு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com