
கரோனா பாதிப்பு மற்றும் ஜிகா வைரஸ் அச்சத்துக்கு மத்தியிலும் கர்நாடக அரசு திங்கள்கிழமை முதல் கேரளத்துக்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளது.
கர்நாடக அரசின் வழிகாட்டுதலின்படி பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை பயணிகள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழையாவது பயணிகள் வைத்திருக்க வேண்டும். மேலும் கேரளத்திலிருந்து தினசரி கர்நாடகம் வருவோர் ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, அதன் சான்றிதழை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும்.
கர்நாடக போக்குவரத்துக் கழகம் தேவைக்கேற்ப பெங்களூரு, மைசூரு, மங்களூரு மற்றும் பிற பகுதிகளிலிருந்து பேருந்துகளை இயக்குகிறது. மக்களின் வசதிக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக போக்குவரத்துக் கழகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.