அமைச்சரவை குழுக்களில் அதிரடி மாற்றம்: ஸ்மிருதி, பூபேந்திர யாதவுக்கு முக்கியத்துவம்!

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுக்களில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுக்களில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. மூத்த அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரமேஷ் போக்ரியால், ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் பதவி விலகினர். 

நாராயண் ரானே, சர்பானந்த சோனோவால், பூபேந்திர யாதவ், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சரவை குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, பூபேந்திர யாதவ், சர்பானந்த சோனோவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் மத்திய அமைச்சர்கள் விரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, அனுராக் சிங் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவிலும் பணி நியமன குழுவிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் உள்ளனர்.

முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் மத்திய அமைச்சர்கள் நாராயண் ரானே, ஜோதிராதித்யா சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மோடி தலைமையிலான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்கான அமைச்சரவை குழுவில் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ், ராம்சந்திர பிரசாத் சிங், கிஷண் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com