
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து கொண்டிருந்த போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர். இதனால் அமைச்சர்களின் அறிமுகத்தை அறிக்கையாக பிரதமர் தாக்கல் செய்ததையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, பிற்பகல் 12.24 மணிவரை அவையை ஒத்திவைக்க மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.