நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்: ராகுல் காந்தி
நாட்டின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.
பெகாசஸ் என்ற ஹேக்கிங் மென்பொருள் மூலம் இந்திய பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டது தடயவியல் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தி வயர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், நீங்கள் (மோடி) என்ன படிக்கிறீர்கள் என்பது முழுமையாக எங்களுக்கு தெரியும் என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நபர்களை அரசு கண்காணித்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களோ உண்மையோ இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.