ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கேரளத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் மீண்டும் அதிகரிப்பு

கேரளத்தில் புதிதாக 16,848 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூலை 2021, 4:53 pm

DIN


கேரளத்தில் புதிதாக 16,848 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளது. புதிதாக 16,848 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,87,716 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 10 சதவிகிதமாக இருந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 12 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது.

மேலும் 104 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 12,052 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 30,45,310 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,26,398 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 783 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 1,41,431 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11.91 சதவிகிதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.