'மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தால் கரோனா குறையவில்லை'
மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தால் மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று குறையவில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தால் மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று குறையவில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜெ.ஏ. ஜெயாலால்,
கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களும் அதிக அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் மாநிலமாக உள்ளது. மேலும் அவ்விரு மாநிலங்களும் மற்ற மாநிலங்களுடன் அதிக அளவிலான போக்குவரத்தைக் கொண்டுள்ளன. இரு மாநிலங்களிலும் தொற்று குறையாததற்கு அது மிக முக்கிய காரணம்.
கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை விகிதம் குறைவாகவே உள்ளது.
கேரளத்தில் வார இறுதி நாள்களில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய நாளிலும், பொதுமுடக்கத்திற்கு பிறகும் சந்தைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு காரணமாகிறது.
சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கு வணிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...