தில்லியில் புதிதாக 44 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் 63,019 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 44 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.07 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களைக் காட்டிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியுள்ளது. 37 பேர் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,35,609 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,10,005 பேர் குணமடைந்துள்ளனர். 25,035 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 569 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 25,985 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் 16,704 பேர், இரண்டாவது தவணை செலுத்திக்கொண்டவர்கள் 9,281 பேர்.
தில்லியில் இதுவரை மொத்தம் 93,67,800 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...