
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
கரோனா தடுப்பூசி, பரவல் குறித்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுவது குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் கூடவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று காலை கூடிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இன்றைய கூட்டத்தின் இரு அவைகளிலும், பெகாசஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.