கேரளத்தில் கனமழை எதிரொலி : மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம், இடுக்கி , கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் தொடர்ந்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை அளித்திருக்கிறார்கள்.
மேலும் 50 -60 கி.மீ வேகத்தில் காற்றானது கேரளக் கடற்கரை கடக்க இருப்பதால் ஜுலை 26 ஆம் தேதி வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
நேற்று கண்ணூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* தொடர்ந்து 24 மணி நேரம் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் சிவப்பு எச்சிரிக்கை
* 6 - 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் ஆரஞ்சு எச்சரிக்கை
* 6 - 11 சென்டி மீட்டர்க்கு மஞ்சள் எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...