ஏஜிஆர் தொகையை மறு மதிப்பீடு செய்ய கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி

அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவை தொகையை மறு மதிப்பீடு செய்ய கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவை தொகையை மறு மதிப்பீடு செய்ய கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு உரிம தொகையாக செலுத்த வேண்டும். ஏஜிஆர் தொகை எனப்படும் இவற்றை செலுத்த உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கியது.

வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 93 ஆயிரத்து 520 கோடியை அரசுக்கு ஏஜிஆர் நிலுவை தொகையாக செலுத்த வேண்டும். அதில், 10 சதவிகித நிலுவை தொகையை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏஜிஆர் நிலுவை தொகை மதிப்பீடுகளில் பிழை இருப்பதாகக் கூறி, தொகையை மீண்டும் கணிக்கிட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதுகுறித்த விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. தொலைத் தொடர்பு துறையின் கணக்குப்படி, பாரதி ஏர்டெல் 43 ஆயிரம் கோடி ரூபாயும் வோடாஃபோன் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகவும் நிலுவை தொகையை செலுத்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com